Thursday, September 15, 2011

Dravid the Great Wall of India

டிராவிட்... நீங்க மத்தவங்களுக்கு எப்டின்னு தெரியாது ... ஆனா எனக்கு நீங்க தான் ரோல் மாடல்... உங்க ஆட்டத்த பாத்து தான் நான் கிரிக்கெட் ஆட ஆரமிச்சேன்... நீங்க எத்தனையோ முறை... பெருஞ்சுவரா இருந்து காத்திருகிங்க... டீம் காக... எல்லாத்தையும் செஞ்சுருகிங்க.. அனால் ஒன்னு உண்மை... இந்த பிசிசிஐ உங்களுக்கு எதுமே செஞ்சதில்லை... இந்த மக்களுமே தான்... ஊடகங்களும் தான்... சச்சின் 50 அடித்தால் அரைப்பக்கத்திற்கு எழுதுவார்கள்... ஆனால் நீங்கள் சதம் அடித்தால் கூட சாதரணமாக எழுதுவார்கள்... பலமுறை ஏன் இந்த சுண்ணாம்பும் வெண்ணையும் என்று விரக்தி அடைவேன்... என்னை பொறுத்தவரை... தோல்வியில் கூட நாம் எப்படி தோற்கிறோம் என்பதை கூர்ந்து கவனிப்பவன் நான்... அந்த விஷயத்தில் நீங்கள் சச்சினை விட சிறந்தவர்... பல முறை நீங்கள் தனியாளாக போராடி இருகிறீர்கள்... 50 ஓவர்கள் முழுவதுமாக வலையாடினால் கூட வெல்ல கூடிய ஒரு மாட்சை கூட யாரும் இல்லாத காரணத்தால் தொர்ரிருக்கோம்... எதைபெருக்கு தெரியும்... சயீத் அன்வர் 197 அடிச்சி... இந்தியாவை நார் நாராய் கிழித்த அந்த மட்சிலதான் நீங்க முதல் சதத்தை பதிவு செய்தீர்கள் என்று ??? அன்று வெற்றியின் விளிம்பு வரை சென்றோம்... அதுவும் உங்களால்... ஏதோ எனக்கு எல்லாம் நேற்று நடந்தது போல் உள்ளது... இந்திய கிரிகேட்க்குகாக நீங்க நிறைய செய்துவிட்டீர்கள்... நன்றி...